மாணவர்களுக்கான நம்பிக்கை
மாணவர்களே -
தோல்விகள் காணாது
தோள்கள் உயராது -
தோல்வி தளத்தில் - நீங்கள்
விழுந்தாலும் - நீங்கள்
விழும்போது மனதளவில்
எண்ணுங்கள் - மீண்டும்
எழுதுவோம்... - மீண்டும்
எழுவோம்....என்று......
நீங்கள் தோற்றாலும்
ஏற்கவேண்டியது மனதுயரத்தையல்ல-
ஏற்கவேண்டியது மனதைரியத்தை-
துயரத்தை தொட்டவர்கள் தான்
உயரங்களை தொட்டு இருக்கிறாா்கள்
காலாண்டு போனால் அரையாண்டு
அரையாண்டு போனால் முழுயாண்டு
முழுயாண்டு போனால் அடுத்த ஆண்டு
ஆனால் - முயற்சியை விட்டுவிடாதே
அணுவளவும் நம்பிக்கை விட்டுவிடாதே-
பரிட்சையே வாழ்க்கையல்ல - இங்கே
பரிட்சை என்பதையே அறியாதவர்கள் கூட
அரியணையில் அமர்ந்து
ஆட்சி செய்த கதையுண்டு -
நிராகரிக்கப்பட்ட குப்பையிலிருந்தும் -
நம்மவர்கள் மின்சாரம் எடுக்கும்போது...
நாம் குப்பையைவிட கீழானாவர்களா என்ன..?
நிச்சயமாக இல்லை - நாம்
தேர்வுகளால் நிராகரிக்கப்பட்டாலும்
மாணவர்களே - நிச்சயம்
ஒருநாள் ஔிவீசுவோம் - அதனால்
தேர்வு பயத்தையே விட்டுவிடுங்கள் -
தற்கொலை எண்ணங்களையும்
தூக்கி எறி(ரி) யுங்கள் - நாம் இன்று
வீழ்ந்தாலும் - கண்டிப்பாக ஒருநாள்
வாழ்ந்துகாட்டுவோம் - என்ற
நம்பிக்கை விதையை - உங்கள்
நெஞ்சத்தில் விதையுங்கள் - பின்
நாளைய சரித்திரம் முளைத்தெழும்
நிச்சயமாய்...உங்கள் காலடியில்...
ஒன்றை மட்டும் -
ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் -
தோல்வியிலிருந்து மீண்டவரையே
சரித்திர தாய் - தன்மடியிலிட்டு
சீராட்டுவாள்.... பாராட்டுவாள்....!!!
வாழ்த்துக்கள்.... மாணவர்களே -
வளருங்கள் - என்றும்
நம்பிக்கையோடு எழு(து)ங்கள்
நம்பிக்கையோடு வாழுங்கள்.....
- நட்புடன் கவிஞர் நளினி விநாயகமூர்த்தி