அன்பே
எதனை நினைத்துக்கொள்வது?
நீ
விலகிக்கொள் எனச்சொல்லிப்பின்
திரும்பி அழுததையா..
கனவில் வந்தாய் என்பதாலே
உனை தேடிப்புறப்பட்டதையா..
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
உன் தவறிற்காக திட்டிவிட்டு
ஆயிரம் மன்னிப்புகள் அனுப்பியதையா..
உனை இழந்ததுபோல் வேறொரு
வலி இல்லையென நீ
புலம்பித்தள்ளியதையா..
ஒரு நொடி சிரித்துப்பின் மறுநொடி
முறைக்கும் அந்த
அழகுக்கண்களையா..
கவி ஒன்றைக்கேட்க நான்
புனைந்தெழுதித்தந்தால் அதில்
விமர்சனம் வைக்கும் உன்
மௌனப்புன்னகையையா..
உனதருகாமை தொலைந்துநிற்கும்
இத்தருணத்தினில் அன்பே
எதனை நான் நினைந்துகொள்ள..?
Rafiq