தொலைந்தேனடா
உறக்கத்தில் விட்கள் எழுந்தாலும் விழித்துக்கொள்வேன் ,
நினைப்பது நீங்கள் என்று,
உறவில் விரிசல் விழுந்தாலும் விட்டுக்கொடுப்பேன் ,
மணப்பது உங்களை என்று,
தொலைவில் இருந்தாலும் கனவில் தோன்றுவேன் ,
காண்பது நீங்கள் என்று,
தூரம் சென்றாலும் தோளில் சாய்வேன் ,
அணைப்பது உங்களை என்று ,
மொத்தத்தில் நான் தொலைத்தது என்னை இன்று !