உன் நினைவுகளை மட்டும்

பூகம்பத்தில் தப்பியவனாய் நிராதரவாய்
நிற்கும் நான்

நீ விட்டுப்போனது எதாவது என்னிடம்
இருக்கின்றதா என்று

யோசித்துப் பார்த்தேன் உன் நினைவுகளை மட்டும்

உன்னால் எடுத்துச்செல்ல முடியவில்லை
என்பது மட்டும்தான்

நான் பெற்ற வெற்றி

எழுதியவர் : நா.சேகர் (12-Feb-20, 12:19 pm)
பார்வை : 288

மேலே