அவள் என்னோடு தானிருக்கிறாள்

எனக்குத் தெரியும்
அவள் என்னோடு
தான் இருக்கிறாள்
நாணத்தால் நெருங்க
முடியாமல் தவிக்கிறாள்
மோசக் காற்றே உன்னை
சந்தி சிரிக்க வைப்பேன்
களவாய் வந்து அவளை
அள்ளி அணைக்கின்றாயா ?
அவள் உடல் முழுவதும்
ஊர்ந்து திரிகின்றாய் நீ
எரிச்சலாய் இருக்கிறது
பொறாமையாகவும்
இருக்கின்றது உன்னோடு !

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (12-Feb-20, 11:23 am)
பார்வை : 302

மேலே