வெளிநாட்டுப் பயணம்

எனை ஆட்கொள்ளும் அண்ணலே..
உன் விரலின் பிரிவை
எந்தன் யாக்கை தாங்குமா?
உன் சொல்லின் பிரிவை
எந்தன் செவிகள் தாங்குமா?
உன் கண்களில் பிரிவை
எந்தன் இதயம் தாங்குமா?
உன் அன்பின் பிரிவை
எந்தன் உடல் தாங்குமா?
உன் முகத்தின் பிரிவை
எந்தன் ஜீவன் தாங்குமா?
உன்னால்...
ஈன்றவரைப் பிரிந்தும் அழவில்லை
உன்னை பிரியவே..மனமில்லை..
பிரிவை தாங்கும் மனம் தந்து- பிறகு
நாழிகை பிரிவினை.. தா.. தலைவா..

எழுதியவர் : பஜூலுதீன் யூசுப் அலி (12-Feb-20, 6:24 pm)
பார்வை : 75

மேலே