80s Kids

நொங்கு மட்டையில்
வாகனம் செய்து..
நெல் வரப்பினில்
நேர்நடை பயின்று..
தென்னை குச்சியில்
அம்புகள் ஏய்து...
அம்மா புடவையில்
ஊஞ்சல் செய்து..
முதுகினில் கை ஊன்றி
ஆபியம் விளையாடி..
குட்டி மண் பாத்திரத்தில்
பொய் உணவு உண்டு ..
ஜவ்வு மிட்டாயில்
கை கடிகாரம் அனிந்து
தேன்மிட்டாயின் உள்
தேன் எப்படி என குழம்பி...
தவளை குஞ்சுகளை
மீன் குஞ்சுகள் என ஏமாந்து..
மூன்று வயது மூத்தவரானாலும்
கைக் கட்டிக் கொண்டு
பதில் கூறுவோம்...
இன்றும்...அப்பாவிகளாக...

எழுதியவர் : பஜூலுதீன் யூசுப் அலி (12-Feb-20, 8:37 pm)
பார்வை : 454

மேலே