காதலே♥️காதலர் தினம் வாழ்த்துக்கள்
காதலர் தின வாழ்த்துக்கள் ❤
காதலே ❤
உன்னை கடக்காத மானுடம், மானுடம் அல்ல.
உன்னை நேசிக்காத மனிதர்கள், மனிதர்கள் அல்ல.
உன்னை உரசாத இளமை, இளமை அல்ல.
உன்னை நினைக்காத நெஞ்சம், நெஞ்சம் அல்ல.
உன்னை சுமக்காத இதயம், இதயம் அல்ல.
உணர்வுகளின் உன்னதம் காதல்.
மானுடத்தின் மகோன்னதம் காதல்.
இளமையின் உயிர் நாடி காதல்.
இல்லறத்தின் நல்லறம் காதல்.
உன்னை சுவாசித்த சிலர்
சிலாகித்து இல்லறத்தில் இனைந்து நல்லறம் பயல்கின்றனர்.
உன்னை போற்றிய பலர் தோல்வியை தழுவி இலக்கியத்தில் இடம்பெற்றனர்.
காதலே நீ என்றும் தோற்றதும் இல்லை.
ஜெயித்ததும் இல்லை.
இங்கே தோற்பதும், ஜெய்ப்பதும் மானுடம் தான்.
காதலே நீ! என்றும் பூத்து குலுங்கும் நந்தவனமாய்,
வாசம் நிறைந்த மலராய்,
என்றென்றும் மனிதகுல மாணிக்கமாய், மகுடமாய்
உலக மனித இதயங்களில் நிரந்திர ரீங்காரமாக இசைத்து கொண்டுயிருக்கிறாய்.
காதலே உன்னை போற்றி வணங்குகிறேன்.
- பாலு.