காதல்

கண்ணே

உன் நினைவுகளில்

நீந்தி மூழ்கி 

போனேன்...

பேருந்து நிறுத்தம்

நீயும் நானும்

தனித்தனியே...


என் கையில்

கடிதம் 

இதயத்தில் இ(ம்)சை

யாரும் கேட்காமல்

சற்றே வேகமாக...


உன்னிடம்  கொடுப்பதா

வேண்டாமா

உன் பதில் எதுவாக

இருக்கும்

படபடப்பு

நீயோ

என்னை கண்டும்

காணாமல்

நெஞ்சில் ஒரு  துணிவு

உன் எதிரே நான்

ஏங்க ( ஆம் ஏங்கிதான் போனேன் )

உன் பார்வை  (ஆம் இந்த  பார்வை  தான் பாடாய் படுத்தியது)

கையில் கடிதத்தை

திணித்தேன்

அடுத்த  நொடி
 
பயணம் ஒரு பேருந்தில்

நிம்மதி பெருமூச்சு

கொடுத்தாச்சு

இனி அவள்

எனக்குத்தான்

என்ன ஒரு நம்பிக்கை

இது தான்

காதல்...⚘⚘⚘

எழுதியவர் : (14-Feb-20, 11:22 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : kaadhal
பார்வை : 28

மேலே