தமிழ் பா

தேனருவிப் பூந்தென்றல்
தீந்தமிழிசை மீட்டியவீணை லயித்து
தென்பொதிகை அடியமர்ந்து
திருநீறும் தானணிந்து
நாணல் கச்சை மேனிபுனைந்து
சித்திரசபைதனில் நாட்டியமாடும்
எங்குலத்தான் பெருமழைதான்
குறவஞ்சிப்பாடலில் மெய்சிலிர்த்து
கங்கைசூடிய களிப்பில்
பொருணைக்கும் புகழ் அளித்து
குறுமுனிக்கும் அருளிய அருள்நிறை
மந்திரமாம் அய்யன் ஈசனின்
தாழ்பணிவதில் ஓரறிவிற்கும் ஈடாக
நினைந்த யென்பிழை பொருத்தருள்வாய் நீடூடிவாழ் எம்பொருணையே!

எழுதியவர் : மேகலை (15-Feb-20, 1:05 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 176

மேலே