அழகே அழகே

கல்லூரி பூக்களில்
வண்ணமாய்த் தெரியும்
ஒற்றை ரோஜாவாய்

அவள் நின்றாள்
கன்னி மாடத்தின் நடுவே
அக் கணமே
எண்ணம் பிறழ்ந்த
வண்டாய் மாறிய
எனது இதயம்
பூந்தோட்டக் காவலையும்
மறந்து இரவு பகலாய்
சுற்றித் திரிந்தது
கற்றையில் உயர்வான
அவ் ஒற்றை அழகைக்
கவர்ந்து கொள்ளும்
அங்கலாய்ப்பில்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (16-Feb-20, 1:15 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : azhage azhage
பார்வை : 215

மேலே