அன்னை மடி

----------------------------------
அன்பின் உறைவிடமாம் அகிலத்தில்
சுகத்தின் இருப்பிடமாம் யாவருக்கும்
ஆறுதல் அடையுமிடம் இதுவன்றோ ...
இணையிலா இன்பமும் பெற்றிடலாம்
இறுக்கத்தை உறுதியாய் தளர்த்திடலாம்
இவ்விடத்தில் தலைவைத்தால் நிச்சயம் ....
ஆறாத நெஞ்சங்களுக்கு புகலிடம்
இடிந்த இதயங்களும் துடித்தெழும்
வற்றிய உள்ளங்களும் ஊற்றெடுக்கும் ...
உணர்விழந்த உடலும் உயிர்பெறும்
கலங்கிய மனமும் தெளிவடையும்
அன்னை மடியை தஞ்சமடைந்தால் ...
------------------------------------------------------
பழனி குமார்