பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு வருமானம் கவிஞர் இரா இரவி

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !

வருமானம் ! கவிஞர் இரா .இரவி !

வரவேண்டும் அறவழியில்
வரக்கூடாது பிறவழியில்
வருமானம் !

குறுக்கு வழியில் சேர்த்தால்
எண்ண வேண்டும் கம்பி
வருமானம் !

நிலைத்து நிற்கும்
நேர் வழியில் வருவது
வருமானம் !

வேகமாக வருவது
வேகமாகவே போய்விடும்
வருமானம் !

அரசு ஊழியருக்கு வரி உண்டு
வணிகர் சிலர் காட்டுவதில்லை
வருமானம் !

மூச்சு உள்ளவரை
முறையாகச் சேர்க்கலாம்
வருமானம் !

மானம் விற்று
வருவது அவமானம்
வருமானம் !

அடுத்தவரை அடித்துச் சேர்த்தால்
அழிவது உறுதி
வருமானம் !

வெள்ளையாக இருத்தல் அறம்
கருப்பாக இருந்தால் சிறை
வருமானம் !

சேர்க்கின்றனர் சொத்து
காட்ட முடிவதில்லை கணக்கு
வருமானம் !

ஏழைக்கு எட்டாக்கனியானது
பணக்காரனுக்கு பறிக்கும் கனியானது
வருமானம் !

வராதபோது
வாழ்வாதாரம் வினாக்குறியாகும்
வருமானம் !

குடிகாரனுக்கு அவமானம்
அரசுக்கோ
அமோக வருமானம் !

பணக்காரன் மேலும் பணக்காரன்
ஏழை மேலும் ஏழை
வருமானம் ?


.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (18-Feb-20, 8:37 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 118

மேலே