திரைப்பாடல் மெட்டுக்கவிதை

ஆண்:
பூ வாசம் வீசுதடி நீ பேசும் பேச்சினியே
புது உலகம் தெரியுதடி நீ சிரிக்கும் சிரிப்பினிலே
பதினெட்டு வயது வந்த பருவத்து பைங்கிளியே
பகலெல்லாம் உலா வந்து பல பாடு படுத்திறியே

பெண்:
கருமேக நிறத்தையெல்லாம் உன் உடலில் பூசிக்கொண்டு
கலைமிகுந்த முகத்தினிலே செந்தூரம் இட்டுக்கொண்டு
வெந்நிற பட்டுடுத்தி வேலையின்றி சுற்றி வந்து
கள்ளனாட்டம் ஓடி வந்து காதல் மொழி பேசுறியே

ஆண்:
உன்னை நினைச்சி ஏங்குறேண்டி உன் நினைப்பால் வாடுரேண்டி
சுடிதார் உடையுடுத்தி சூடேற்றும் பேரழகே
சொக்கித்தான் போனேனே மனதில் உன்னை சொந்தமாக்கி கொண்டேனே
சொல்லுக்கேற்ற பொருளாக சேர்ந்தால் தான் நல்லதடி

பெண்:
பெண்கள் எங்கும் நிறைந்திருக்க பேரழகாய் பலர் இருக்க
பிடிக்காத காதலாலே என்னை பெரும் இம்சை செய்கிறாயே
சூதாட்டம் போலே இன்று காதலாட்டம் ஆயிடுச்சே
சூட்டில் விழுந்த புழுவாட்டாம் பாடுபட வேண்டிவரும்

ஆண்:
ஆயிரத்தில் ஒருவனடி நான் அன்பான மனிதனடி
அழகான காதல் கொண்டு உன்னை அரசியாய் காப்பேனடி
ஆழ் மனது ஆசையடி ஆயுள் வரை வாழுமடி
அச்சம் கொள்ளத் தேவையில்லை விட்டு விலக வேணாமடி

பெண்:
அயோத்தி இராமன் கூட அவன் மனைவியை சோதித்தானே
அமராவதி அம்பிகாவதி காதல் எல்லாம் தோத்திடுச்சே
ஆர்வமில்லா என்னிடத்தில் காதல் ஆர்ப்பாட்டாம் செய்யாதே
ஆயுளோடு வாழ்ந்திடணும் நீ அமைதியாக ஓடி விடு.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (19-Feb-20, 6:12 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 34

மேலே