மனிதன் மட்டும்
குரங்கி லிருந்து பிறந்தவன்தான்
குணமதில் மனிதன் மாறிவிட்டான்,
மரத்தை உறைவிடம் ஆக்கியேதான்
மனம்போல் வாழ்ந்திடும் குரங்கினமே,
மரத்தின் கிளையி லிருந்தாலும்
மரத்தை யழிக்க நினைப்பதில்லை,
தரத்தி லுயர்வாம் மனிதனவன்
தாழ்கிறான் மரங்கள் தனையழித்தே...!