பிரம்பு
பிரம்பு
போலீசுக்கும் டீச்சருக்கும்
ஒற்றுமை 'பிரம்பு'
ஒற்றைக்கேள்வி...
அந்த பிரம்பு பிடித்து யாரடித்தால்
சமுதாயம் ஓங்கும்?
போலீஸ் அடிக்குதான்
என்பவரிடம்
காரணம் கேட்டால்
'சமுதாயத்தில்
குற்றங்கள் குறையும்'
என்பர்
ஏற்றுக்கொள்ளலாம் பதிலை!
டீச்சரின் பிரம்படியே நன்று
என்பவரிடம்
காரணம் கேட்டால்
'குற்றம் இதுதான், அதை செய்யாதே
என பிஞ்சிலே குழந்தைகளை
அழகாய் செதுக்குபவர் அவரே'
என்பர்
ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் பதிலடியை!
'குற்றத்தை குறைப்பது மேல்'
அதைவிட மேல்
'குற்றம் இல்லாதிருப்பது...'
அதை சரியெனசெய்பவர் ஆசான்!
அப்படியிருக்க
குற்றம் திருத்தவே என்றாலும்
லத்தி சார்ஜ் என அடித்து துவம்சம் செய்யும்
போலீஸிடம்
எதிர்ப்பை காட்டாத
ஒரு சில சமூக ஆர்வலர்
ஆசிரியர்
நல்லதை சொல்லிக்கொடுக்க
பிரம்படி கொடுத்து
மாணவன் கை சிவந்து போனால்
'அராஜக கல்விமுறை ஒழிக'
என பள்ளியை முற்றுகையிடுவது
நியாயமோ...?
தவறான சில மனிதர்கள்
பத்து விழுக்காடு அளவு
எல்லாத்துறையிலும் உள்ளார்கள்;
அவர்களை கைநீட்டி
வெகுஜன மக்களின் உணர்வை
திசை திருப்பிடுதலும் நன்றன்று!
டீச்சரின் கையிலிருந்து
பிரம்பை பறித்துக்கொண்டு
ஐந்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு
கொண்டுவந்து
எதிர்கால சந்ததிகளுக்கு
என்ன கல்விமுறையை
கொடுக்க போகிறார்கள் இவர்கள்...!
அன்பை விதைத்து அறிவை வளர்த்திடவே
ஆசான் யாவரும் இங்கே...!
ஆனால் அன்பு தோற்றிடின் அவ்விடம்
பிரம்படியே அறிவை விதைக்கும்...!
இங்கு ஆசானின் அன்பு
அதிகமாய் தோற்றுகொண்டே போகிறது...!
-மன்னை சுரேஷ்