என் தேசத்தின் மீதான காதலால்
குலைநடுக்கத்தில் பாரத்துக்கொண்டிருந்தாள் பாரதமாதா
நிகழும் போர்க்களத்தில் புதல்வர்கள்
வெல்வார்களோ வீழ்வார்களோவென்று..
நடுவீதியில் கிழித்தெறியப்பட்டிருந்த
அரசியல் சாசனம்
பாரதமாதாவிற்கு ஆறுதல் சொல்லிற்று..
நம்பிக்கையினடிப்படையிலாவது உன் புதல்வர்கள்
வெல்வார்களென்று
ஆங்காங்கே
பற்றி எறிந்துகொண்டிருந்த
சமத்துவமும் சகோதரத்துவமும்
குற்றுயிரும் குறையுயிருமாய்
பாரதமாதாவின் கருணைமிகு கரங்களுக்குள்
கரைந்துகொண்டிருந்தன..
இப்போது கொஞ்சம்
அன்னைக்கு நம்பிக்கை வந்தது
அதோ
பிரிவினையில் தங்கிவிட்ட பாகிஸ்தானியன் ஒருவன்
இரத்தவெள்ளத்தில் வீழ்கிறான்
பாரத்மாதாக்கி ஜே
விண்ணைப்பிளந்த முழக்கத்தில்
பாரதமாதா
எதற்காகவோ அந்த பாகிஸ்தானியனின் கண்களைப்பார்க்க தவிர்ந்துகொண்டாள்..
அப்போது
பாரதமாதாவின் கரங்கள்
சிவப்பாகி இருந்தன..
Rafiq