கிறுக்கல்கள்

நீளும் பாதை எனக்கென எண்ணி நானும் நடக்கிறேன்
வாழ்வின் தேவை நீ என அறிந்து நாளும் தொடர்கிறேன்
உனைத் தேடி அலைந்து நானும் இங்கே மெல்ல தொலைகிறேன்
உனை கண்டபின்பு என்னாசை சொல்ல விழைகிறேன்

செவிகள் கேட்டிடா பாடல் இங்கே நான் பாடினேன்
மொழிகள் அறியா வார்த்தைகளால் உன்னை பாடினேன்
மேகம் பொழியும் உதிராய் நானே உன்னில் விழுகிறேன்
ஏக்கம் தீரும் ஆசை கொண்டு நித்தம் எழுகிறேன்

கனவில் தோன்றும் முகங்களில் யாவும் உனை காண்கிறேன்
கவிதை பேசும் உன் இதழ்களில் எனை காண்கிறேன்
செடிகள் உறங்கும் சமயம் பார்த்து பூக்கள் எடுக்கிறேன்
நிலவுதித்தபின் பூக்கள் செதுக்கி உனக்காய் கொடுக்கிறேன்

வானம் தேடும் நிலவாய் நீயே என்றும் இருக்கிறாய்
இருந்தும் ஏனோ மாதந்தவராமல் மறைகிறாய்
நாட்கள் கடக்க நானும் இளைக்க மெதுவாய் வருகிறாய்
கார்மேகம் வந்தால் மட்டும் ஏனோ உள்ளே ஒழிகிறாய்

உன் பெயர் அறிய ஆசை இல்லை
உன் விரல் பிடிக்க ஆசை இல்லை
என் பொழுதுகள் தோறும் நிழலாய்
நீயே இருக்க வேண்டுகிறேன்
வரமளிப்பாயா, என் வான்மழையே ?

எழுதியவர் : மணிகண்டன் (26-Feb-20, 8:22 pm)
சேர்த்தது : மணி ராக்ஸ்
Tanglish : kirukkalkal
பார்வை : 519

மேலே