மனிதனால்

குஞ்சுக் குருவிக் குணவில்லை
கூட்டிச் செல்லவும் வழியில்லை,
அஞ்சிட வேண்டும் மனிதனுக்கு
அவனால் வந்ததே இந்நிலைமை,
கொஞ்சமும் இரக்கம் ஏதுமின்றிக்
காட்டு மரங்களை வெட்டிவிட்டான்,
தஞ்ச மடைய இடமில்லை
தாயே இயற்கை காப்பாயே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-Feb-20, 7:39 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : manithanal
பார்வை : 119

மேலே