அவள் நடை
. அவள் நடை .....
அன்னத்தின் நடையும்
மயிலின் நடனமும் கண்டேன்
அது மட்டுமல்ல அதில் பரதமே
ஒருங்கே இயங்குவதும் அல்லவா காண்கின்றேன்
மெல்லிய புன்னகையோடு மெல்ல அசையும்
இதழ்களோடு அசையும் அவள் கைகள்,,
தாளம் சேர்க்கும் சிலம்பு குலுங்கும் கால்கள்
நவரசம் காட்டும் நயனங்கள்....
அவள் நடை இதில் பரதம்
அப்படியே நின்று அபிநயம் செய்வதுபோல்
அவள் நிற்க ... குச்சுப்புடியானது
அவள் கண்களும் தலையும் மட்டும் பேச
கதைக்கும் கதைகளியுமானதே அவள் அசைவு
மொத்தத்தில் அவள் நடை ஓர்
அசைந்தாடும் பரதமே ..... பரத கன்னி.