இல்லறவியல்

இல்லமதில் அறமுண்டென்றால்
அது இல்லறம் ;
இல்லறவியல் என்பது நல்ல பாடம் ;
துணையோடு கூட இணையாக பயிலும் பாடம் ;
நலமே வேண்டுவோர் பெண்மையை போற்றுமிடம் ;
பெண்மை தூற்றுவோர் வெறுமை பெறுமிடம்;
இமை மறந்தாலும் உனை மறவேன் என்று ஆணும்
விழி மூடினாலும் உனையே நினைப்பேன் என்று பெண்ணும்
நா நலம் காத்து நன் நலம் போற்றிடும்
நல்லறமே இல்லறம் ;

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (29-Feb-20, 9:42 pm)
சேர்த்தது : Samyuktha
பார்வை : 83

மேலே