இயற்கை -தூக்கணாங் குருவி கூடு

ஒரு வீட கட்டிட எத்தனைப்பேர்
கட்டிட கலை நிபுணர் கட்டிடத்திற்கு
வரைபடம் வரைந்து தர ....அதை வீடாக
மாற்ற பணிபுரிபவர் எத்தனைப்பேர்...
முடிவில் ஒரு வீடு தயாராகிறது சில பல
மாதங்களுக்கு பிறகு....வீடு உருவாக்க
கடக்கால்l முதல்....செங்கல்,சிமெண்ட்,மணல்
ஸ்டீல், இன்னும் ராக்கத 'மெஷினேரி'.....கோடிக்கணக்கில்
செலவில் உருவாகுது வீடு !

இந்த சின்னஞ்சிறு குருவியைப்பாருங்கள்
மண்ணில் இரைந்து கிடக்கும் உலர்ந்த புல்
கொண்டே தன் சிறிய அலகுகொண்டே
பின்னி தைத்து தயாராக்கிறது ஒரு
அதிசய 'பறவை வீடு' ....... கிட்டே சென்று
பார்த்து ரசித்தால் புரியும் அதன் அழகு
அதில் பிரதிபலிக்கும் சமச்சீர் ......
மயனும் மயங்கிடுவான் இந்த அற்புத
படைப்பைக் கண்டால் .....

என் மனதில் என்றும் இதற்கொரு தனி இடமுண்டு

தூக்கணாங் குருவி கூடு

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (1-Mar-20, 3:29 pm)
பார்வை : 158

மேலே