வெள்ளைப் பூக்கள்
மல்லிகை சூடி பட்டு உடுத்தி
நாணமாய் வந்தவள்
விதி எழுதிய நாடகத்தில்
அழகு கலைந்த கதாநாயகி
குங்குமச் சிமிளுக்குள் உப்பு நீர் சேர்க்கிறாள்
கலியாணப் பட்டு மடிப்பு வெடித்துப் பாேகிறது
வெள்ளை பூக்கள் கூட தலை சூட முடியவில்லை
வெள்ளைச் சேலை அவளை அழகாக பாேர்க்கிறது