முன்னாள் காதலி
கைவிட்டுப்போன ஒரு காதலில்
அவள் தேவதையாய் வாழ்ந்திருந்தாள்
அவள் சிரிப்புகளும் கோபங்களும்
இன்றுவரை சேமிக்கப்பட்டிருக்கின்றன
அவள் அறியாதிருந்தபோது
அவள் பெயர் ஆயிரம்முறை உச்சரிக்கப்பட்டது
உலக அழகிகளுடன் அவள்
ஒப்பீடுசெய்யப்பட்டாள்
அவளுக்காக காத்திருந்த நிமிடங்கள் எவ்வளவு என்று
அவளுக்கு அறிவிக்கப்படாமலேயே போய்விட்டது
காணும் பெண்களில் அவளைகண்டதை அவள் அறிந்துகொள்ளவே இல்லை
கைவிடப்பட்ட காதலில்
அந்த தேவதைக்கு
இவன்பால் எவ்வித உணர்ச்சியும்
இல்லாமலேயே இருப்பதன்
விந்தைதான் புரிவதேயில்லை
Rafiq