சிவப்பு விளக்கில் எரிந்த கன்னி பல்பு
ஆடையின் பிசின் அவன்
கண்களால் கழற்றப்பட்டதம்மா...
நிர்வாண பொம்மை ஒன்றின்
கண்ணீர் உயிரோடு உருவப்பட்டதம்மா...
அவன் மூச்சுக்கள் புழுக்களாய்
என்னில் மேய்ந்து கிறுக்கியதம்மா...
அவன் வாள் கைகளை சற்று நகர்த்தி விட
பளிச் என்ற மின்னல்
அறையும் விழுந்ததம்மா...
வயிற்றுக் காட்டுக்குள் நடப்பதற்கு
வேறு வழியின்றி சரிந்து கிடந்தேனம்மா..
முத்தக் குழாய்களால் என் இரத்தம் உறிஞ்சி எடுக்கப்பட்டதம்மா...
நீ தந்த தாய்ப்பாலும் உடல் தரணியில்
நஞ்சுக் கடல்களாய் கொதிக்கிறதம்மா...
அய்யோ.... கடவுளே.... கண்ணாடி திரையும்
அவன் மோகக் கற்களால் நொறுக்கி உடைக்கப்பட்டதம்மா....
என் வாழ்வும் இன்றோடு அழுகி
சமூக காற்றோடு நாற்றம் வீசுமம்மா...
என் உயிர் துண்டு துண்டாக
கிடக்குதம்மா.....
தத்தெடுத்த நீயே வந்து என்ன
ஒவ்வொன்னா புறக்கிட்டு போயிடு அம்மா..
(இஷான்)