அழகியல் அவள்

அழகியல் அவள்.
அழகியலே
அழகுக்கெல்லாம் நீ குடிலே
பேரானந்தமே
பேரானந்தத்தின் பொக்கிஷமே
உன்சுவடுகள்படும் இடமெல்லாம்
சுத்திகரிக்கப்பட்ட சொர்க்கமே !
வேதியில் மாற்றமும்
விஞ்ஞான மாற்றமும்
எனக்குள்ளே உன்னாலே
ஏனிந்த மாற்றம் கண்டறிய
முடியவில்லை என்னாலே
மந்திரம் கற்றாலும்கூட
உன் தந்திரத்தின் முன்
தவிடுபொடியாகும் !
எந்திரமாய் இடைவிடாது நானிங்கே
ஆற்றலை கொடுக்கும் அணுசக்தியே
ஆயுளை கூட்டும் அருங்கனியே
நீயே என் பலம் - நித்தம்
எண்ணில் வேண்டும் நீ ஊர்வலம்
கவியாய்! கலையாய்! இசையாய்!
இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு.ஏழுமலை (3-Mar-20, 12:32 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : azhakiyal aval
பார்வை : 145

மேலே