கனவே

நீ வரும் வரை காத்திருந்தேன்
வந்தப்பின் பூவாய் பூத்திருந்தேன்!
குவலையில் பானம் கொண்டுவந்தேன்!
வந்த என்னை வானம் காட்டி
கண்யிமைக்க கண்ணம் சிவக்க உதடு பிறல பல் கடிக்க இதயம் துடிக்க கை இருக்க
தோள் வேற்க்க தொண்டையில் உமிழ் முழங்க
பாதம் பூமியை பிடிக்க கண்ணத்ததில் முத்தமிட்டாயே!
வெட்கப்பட்டு அந்திதாமரைப்போல தலைக்குனிந்து
ஓடி ஒளிய அவன் கைப்பிடித்து கட்டியணைத்து தலைமுடி
விலக்கிவிட்டு விரலால் வட்டமிட நான் கண்மூடி கண்திறக்க அவன் காணாமல் போனான்!

எழுதியவர் : அவ்வைபுவனா (3-Mar-20, 6:07 pm)
சேர்த்தது : bhuvaneswari v
Tanglish : kanave
பார்வை : 59

மேலே