அண்டகமும் விந்தணுவும்
எல்லா மனிதருள்ளும் ஏதேதோ எண்ணமடா
எல்லா எண்ணங்களும் ஈடேற வழியுண்டோ
எல்லா மனிதர்களும் நல்லெண்ணம் கொள்வரோ
பொறுப்பில்லா மனிதர்களே புவனம் கெட காரணமாம்
பொல்லா செயல்களினால் புது நோய்கள் ஆகலாச்சு
உணவுத் தரும் மண்ணையும் உரமிட்டு கெடுத்திட்டோம்
அறிவியல் கருவிகளால் ஆபாசம் செழிக்கலாச்சு
அருமழையின் வீரியமும் அப்பப்போ மாறி போச்சு
அண்டகமும் விந்தணுவும் அதன் திறன் இழக்கலாச்சு
பகலவனுக்கு இணையாக பணத்திற்கும் பலமாச்சு
பருவம் விளையா பயிர்களால் பக்கவிளைவு ஆயிடுச்சு
பண்பட்ட வாழ்வு முறை பாதாளத்தில் பதுங்கலாச்சு
நீரின்றி வாழ மனிதன் நிறைமதியால் முயலுவான்
நிறைந்திருக்கும் காற்றைக்கூட நீக்கிவிடத் துணிவான்
நிலமின்றி உணவதனை உண்டுபண்ண முடியுமோ.
----- நன்னாடன்.