51 நயம்செய் மன்னவன் ஞாயிறு போல்வன் – குடிகளியல்பு 5

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

பானுவெப் புடையவ னெனினும் பானுவே
வானில வானெனில் வைய முய்யுமோ
கோனருங் கொடியனே யெனினுங் கோனின்றி
மானவ ருய்யவோர் வழியு மில்லையே. 5

- குடிகளியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

சூரியன் வெப்பமுடையவன் என்று அவன் வானில் உலவ வேண்டாம் என்றால் இருளகன்று ஒளியுண் டாகாது; ஒளியின்றி உயிர்களும் வாழ முடியுமோ? முடியாது!

அதுபோல், மன்னனும் தீயவர்க்குக் கொடியவனே என்றாலும், அவன் இல்லையென்றால் மானமுள்ள நல்லவர்கள் வாழ வேறு வழி இல்லையே! என்றும், மக்களுக்கு நல்லது செய்யும் மன்னன் சூரியனுக்கு ஒப்பாவான் என்றும் கூறுகிறார் இப்பாடலாசிரியர்.

பானு - சூரியன், ஞாயிறு, மானவர் - நல்லவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Mar-20, 2:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே