நெருக்கடியும் சிக்கல்களும்
நெருக்கடி! நெருக்கடி! நெருக்கடி!
எங்கும் நெருக்கடி! எதிலும் நெருக்கடி!
நெருக்கடி நமக்கொரு சவுக்கடி!
சாலையில் செல்கையில் வாகண நெருக்கடி
தினம் விபத்துக்கள் அதனால் அடிக்கடி;
பேருந்தில் ஏற்படும் நெருக்கடி
அதில் முடிந்து போகுது பலபேர் தலைவிதி;
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் நெருக்கடி
அதனால் ஏழைகள் வாழ்வில் குறைவதில்லை நோய்நொடி;
குழந்தைகள் அதிகம் பெற்றால் குடும்பத்தில் நெருக்கடி
அதனால் மக்கட்தொகை மலைபோல் உயருதடி;
விதவை பெண்ணுக்கு மறுமணம் நெருக்கடி
அதனால் அவள் உலகம் ஆகுது அடுப்படி;
ஏழைக்குழந்தைக்கு கல்வி நெருக்கடி
அதனால் அவர்கள் எதிர்காலம் ஆகுது கேள்விக்குறி;
ஊணமுற்றோர்களுக்கு சலுகைகள் நெருக்கடி
அதனால் அவர்கள் உள்ளம் குமுறுதடி;
நியாயவிலைக்கடைகளில் நியாயமே நெருக்கடி
எடைகுறைவால் ஏமாற்றமே மிஞ்சுதடி;
விளைநிலங்கள் வீடாவது நெருக்கடி
அதனால் உணவுத்தட்டுப்பாடு குறைவதெப்படி;
சாதிப்பெயரால் சண்டைகள் நெருக்கடி
அதனால் சமத்துவம் என்பது பிறப்பதெப்படி;
உயிரைக்குடிக்கும் புகைப்பழக்கம் நெருக்கடியின்றி அடிக்கடி
இழுத்தபுகை உயிரை உருக்குதடி;
மனதை மயக்கும் விலைமாதுவோ நெருக்கடியின்றி அடிக்கடி
தவறிய பாதையால் கொடும்நோயும் உருவாகுதடி;
மதுபாணம் மனதுக்கும் உடலுக்கும் நெருக்கடி
பெரும்போதையால் உலகமே தள்ளாடுதடி;
நெருக்கடி! நெருக்கடி! நெருக்கடி!
எல்லாத்துறையிலும் நெருக்கடி!
நெருக்கடி வந்தால் சிக்கல்
அது தீர்ந்து போகாத விக்கல்;
நெருக்கடி முற்றிலும் அகல
அரசே நடவடிக்கை எடு முறைப்படி....
-மன்னை சுரேஷ்