என் மனமே

அழுது தோய்ந்த கண்களைப்போல் சிவந்து போன வானம் தொடும்
யாருமற்ற கடற்கரையில் யாருக்காக காத்திருக்கிறாய்..?

தடம் பதித்த கால்கள் உன்னுடன் இருக்க, அலைகள் அழித்த காலடிச் சுவடுகளை
கண்கள் தேடும் வினோதம் ஏனோ!

தொலைத்த அப்பொருளை தேடிக் கிடைப்பதில்லை என்றறிந்தும் - அதைத்
தேடித்தொலைவதின் பயன் என்னவோ!

கடந்தகாலம் எனும் பெருங்கடலில் சிலநினவுகள் ஓயாத அலையாய்
நிகழ்காலத்திலும் நில்லாமல் வீசுவது இயல்பே..!

சில்லென வீசும் கடல்காற்றில் தேகம் சிலிர்த்து இதயம் தொலைத்து
கடந்துவா என் மனமே..!

எழுதியவர் : சிவா விஜய் (8-Mar-20, 4:34 pm)
சேர்த்தது : விஜய் சிவா
Tanglish : en maname
பார்வை : 968

மேலே