காதல் ♥️♥️

காதல்🌹

மொட்டை மாடி.
இரவின் மடியில்,
நிலவொளியில் என்
நிலவுக்காக காத்திருப்பு.
கலையரசி, அவள் வரவை எதிர் நோக்கி
ஏங்கிய என் மனம்.
நேரம் கடக்கிறது.
அவள் இன்னும் வரவில்லை.
ஆண்களை காக்க வைப்பதில் பெண்களுக்கு அப்படி என்ன ஆனந்தம்.
கட்டாந்தரையில் கால் நீட்டி வானம் பார்த்த படுத்தேன்.
வான மகள் நிறைய வெண் புள்ளி வைத்துவிட்டு கோலம் போட மறந்துவிட்டாளோ.
நிலவே! நீ, நீல வான நீச்சல் குளத்தில் குளித்து குளிரில் நடுங்குகிறாயா, அந்த வென் பஞ்சு மேகத்தை எடுத்து போர்த்தி கொள்.

காலடி ஓசை கேட்டது.
என் பெளர்ணமி நிலவு வந்து விட்டாள்.
என் மனம் பூரித்தது
குற்றால அருவி என் மீது பொழிந்தது.
பூவை அவள் புன்னகைத்தாள்.
தரையில் விழுந்த முத்துக்களை தேடினேன்.
தங்க தேர் வந்து என் அருகில் நின்றது.
தங்க தாரகையே!
ஏன் தாமதம்.
உன் எதிர் கால அத்தானை அலைகழிக்கலாமா?
கோல விழி நீல வண்ண மயிலே!
உன் கோமகனை காக்க வைப்பது சரியா?
உங்கள் எதிர்கால மாமனாரையும், மாமியாரையும் சமாளித்து நான் உங்களை காண வருவது எவ்வளவு சிரமம் தெரியுமா?
பெண்கள் காதல் செய்வதில் எவ்வளவு சிரமம் இருக்கு தெரியுமா?
இது தெரியாமல் நீங்கள்... கேள்வி கேட்பது முறையா?
ஏன் திடிர் மெளனம்.
ஒட்டு மொத்த அழகையும் சுமந்து வந்த தேவதையே!
அழகு சிலையே!
வாய் திறந்து கவிதை படித்தாயோ!
கம்பன் உன் பாவனையை கண்டியிருந்தால் இன்னொரு சத்தான, முத்தான காவியம் எழுதியிருப்பான்.
என்ன அப்படி பார்க்கிறாய்.
பட்டாம்பூச்சி சிறகு
படபடக்குதே!
உன் அம்பு பார்வை என் இதயம் தைக்குதே!
உன் இல்லாத இடையை என் கரங்கள் வளைக்குதே!
உன் தேன் குழல் விரல்கள் என்னை தள்ளுதே!
ஆழ் மன ஆசை இருவரையும் அனைத்ததே!
உன் முக்கனி இதழ்களில்
முன்னூறு கவிதை எழுத என் இதழ் துடித்ததே!
இன்ப ஆறு பெறுக்கெடுத்து ஓடியதே!
இளமை, இனிமையை தேடியதே!
காதல், காதலை கொண்டாடியதே.

- பாலு.

எழுதியவர் : பாலு (8-Mar-20, 6:39 pm)
சேர்த்தது : balu
பார்வை : 358

மேலே