உலக பெண்கள் நாள்
உயிர் தந்தவள் தாயாகிறாள்
பரிவு வழிகாட்டால் அக்காவாகிறாள்
அன்பு கொண்டவள் தங்கையாகிறாள்
உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள்
உதிரம் சுமந்தவள் துணையாகிறாள்
உலகம் புதுமைகாட்டி குழந்தையாகிறாள்
தமிழால் தன்னை மொழியாக்கிறாள்
கலையால் எங்கும் புகழ் -- வளர்கிறாள்
அகிலம் கற்றுத்தரும் ஆசானாகிறாள்
மண்ணை நேசிக்கும் காவலாகிறாள்
உயிரை காக்கும் மருத்துவராகிறாள்
அறிவியல் கணக்கில் அவ்வையாகிறாள்
நாட்டை வழிநடத்தும் தலைவியாகிறாள்
ஆண்களை அழகாக்கும் தேவதையாகிறாள்
இயற்கை உருவாக்கும் இறைவியாகிறாள்
ஆண்கள் வாழ்வில் முதலும் முடிவும்
இவர்களே என்றும் இன்முகத்தோடு
சமஉரிமையாய் பகிர்ந்து பாதுகாப்போம்..!
இனிய பெண்கள் நாள் நல்வாழ்த்துக்கள்..!
அன்பரசு மணி