பெண்கள் தினம் கொண்டாட வேண்டும்
==========================================
அதைக் கேட்டு இதைக்கேட்டு
அடம்பிடித்துச் சாதிக்கும் பெண்கள்
கையில் இல்லாவிட்டாலும்
கடன் வாங்கியேனும் கொடுக்கும்
கணவனைத் தினம் கொண்டாட வேண்டும்.
**
பெண் குழந்தைப் பிறந்தவுடன்
பெரிதும் மகிழ்ந்து
அவளைப் பூப்போல வளர்த்தெடுத்து
பொன்னும் பொருளும் சேர்த்து
புருசனாக வரும் ஒருவன் கையில்
கொடுத்து விடுவதற்குள்
அப்பாக்கள் படும்பாட்டை உணர்ந்து
பெண்கள்தான் தினம் கொண்டாட வேண்டும்
**
சமூகமென்னும் கடலில்
அண்ணனென்றும் தம்பியென்றும்
தோழனென்றும், மரியாதைக்குரியவரென்றும்
பல வடிவத் துடுப்புக்களாக நின்று
பெண்ணென்னும் வள்ளத்தைக் கரைசேர்க்கும்
ஆண்களைப்
பெண்கள்தான் தினம் கொண்டாட வேண்டும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
