சிறகுகள் விரி

சிறகுகள் விரி ...
சிறகுகள் விரித்திடுவோம்
விண்ணில் பறந்திடவே
உன்னை மட்டும் நம்பு - அதுதான்
என்றும் உன் தெம்பு
உழைப்பு எனும் பாத்தினிலே
முயற்சி எனும் விதைக்கு
பயிற்சி எனும் நீரை ஊற்று
வெற்றிக்கனிகள் வந்து சேரும்
நல்வழியில் வரும் ஊதியமே
என்றும் தரும் ஆனந்தமே
கோடி கோடி வந்தாலுமே
குறுக்கு வழி வேண்டாமே
பசிக்காக பணமா - இல்லை
பணத்தின் மீது பசியா
கோடிகள் சேர்ப்பவனிடம்
குலைந்துபோகும் அமைதி
கோடீஸ்வரனாக
செய்வதெல்லாம் பெரும் சதி
பெரும் சதி ! பெரும் சதி!
மனிதனுக்கு மட்டுமே - வாழ
உணவும் பணமும் தேவை
பேராசையின் உச்சம்
இங்கே மனிதனே!

இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (9-Mar-20, 3:02 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : siragukal viri
பார்வை : 169

மேலே