உன் வரி விழிகளில்

உன் கவிதை
வரிகளில்...
சுகம் மொன்றை
நான் கண்டேன்
என்னுள்ளே ;

சொல்லில் அடங்கா
துயரின் வரியிலும்
புது சுவையினை
இழைத்திடுமே !....‌
உன் கவிதையின்
வரிகளும் தான்...

இதயத்தில்
ஊடுருவி
உயிர் வரை
புதைந்திடுமோ!...

சொற்களினால்
சிறைப்பிடிக்கும்
மந்திரமும் ,
தந்திரமும் ;

எங்கனம்....
யாரிடம்...
எப்படி...
பயின்றாய்
நீ !......

அதிசயமாய்
கிடைத்திட்ட
புதையல்
தானோ
நீ .......
படைக்கும்
கவிதையான
விருந்துமே !.....

எழுதியவர் : Veenu (9-Mar-20, 11:52 pm)
சேர்த்தது : Piyu
Tanglish : un vari vizhikalil
பார்வை : 104

மேலே