தேனீர் காதல்

அவளை
என் விரல்களால் வருடி..
எந்தன் கைகளில் அள்ளி..
அழுத்தமாக ஒரு பிடி பிடித்து..
அவளின் வாசம் நுகர்ந்தேன்!
எனக்கு போதை தலைக்கேற
அவள் அருகினில்
என் இதழ்களை
மெல்லமாய் கொண்டு செல்ல
அவள் தேகமோ அனலாய் கொதிக்க
ஆற வைத்து அனுபவிக்க மனமின்றி
இமைமூடி சுவைத்தேன்!
அடடடடா...
நான் இன்பத்தில் திளைத்தேன்!!!

அவள்-"தேனீர்"😜

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (10-Mar-20, 2:05 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : thener kaadhal
பார்வை : 1102

மேலே