சட்டம் இயற்றியவன்

சட்டம் இயற்றியவன் பெரிய சாமார்த்தியசாலியே
எந்த ஆயுதமின்றி வெறும் எழுதுகோலைக் கொண்டே
எத்திக்கு மக்களையும் கால் கைகளில் காப்பீட்டு
கட்டுப்பட வைத்து கடுந்தண்டனைக்கு கால்கோலிடும்
கணக்கற்ற ஆதிகாரம் வழங்கியவன்.

அன்றும் இன்றும் என்றும் கடவுளாக கருதப்பட வேண்டி
அல் நிறத்து ஆடைக்கொடுத்து தீர்ப்பு வழங்குபவரை
அரிய பொருளாய் அறிய வைத்த வெற்றியாளன்
அறியாத துறையில் கூட நீதிமான்களால் தீர்ப்பளிக்க
நீள் அதிகாரத்தை சட்டத்தால் கொடுத்தவன்.

எவ்வகை தீர்ப்பு வழங்கினும் எள்ளளவேணும்
எவ்வினா எழுப்பினாலும் எல்லென தண்டனை பாய
எல்லா வகை பாதுகாப்பையும் கொடுத்து வைத்தவன்
எண்ணற்ற நீதிமன்றங்கள் எப்படி தீர்ப்பு வழிங்கினும்
எதிர்ப்பேச்சின்றி ஏற்றுக்கொள்ளப் பணித்தவன்.

கண்டந்தோறும் உள்ளோர்கள் கணக்கின்றி செய்யும்
கபட நடவடிக்கைக்கு கண்டடி தண்டனையை இயற்றி
கட்டமாக புத்தகம் செய்து சட்டம் என்று பெயரிட்டு
கண்ணி வைத்து கண்காணிக்கும் வேடன் போல்
கன்னியமானவனாய் தன்னைக் காட்டிய கனவான்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Mar-20, 2:15 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 71

மேலே