2020 ஆம் ஆண்டின் தமிழக அரசு

காய்ச்சச் செல்வதும் நாங்களே
காவல் இருப்பதும் நாங்களே
கடுஞ்சோதனைச் செய்வதும் நாங்களே
கடுந்தண்டனைக் கொடுப்பதும் நாங்களே
கண்டபடிக் கடை வைப்பதும் நாங்களே
கண்டனம் செய்வோரைக் கதர வைப்பதும் நாங்களே
கல்லாக் கட்ட இலக்கு வைப்பதும் நாங்களே
கல்வியளிப் போருக்கு காசு கொடுக்க இதுவென
கண்ட கண்ட அமைச்சரால் கட்டியங் கூறுவதும்
கருத்தென்ற பெயரால் கறையை உருவாக்கி
காலம் அழிக்கா வரலாற்றை ஆக்குவதும் நாங்களே நம்பிக்கை ஆட்சியாளரும் நாங்களே நாங்களே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-Mar-20, 11:38 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 69

மேலே