பெண் மனம்
உன்னை குறித்து
கவிதை எழுத
நினைத்தேன் ;
ஒரு சொல்
கவிதையாக
வடித்திட நினைத்து ;
எங்கு செல்வேன்
உனக்கான ஒரு
சொல் தேடி....
சொற்களும் தான்
வஞ்சம் செய்ததே ,
எதனிலும் அடங்காத
பெரும் கவிதையோ ;
நீ...ர் !...... நீர் ஊற்றின்
உருவாகும் வெள்ளத்தின்
பிராவாகமோ நீ !.......?
ஓ.... பின்பு தான்
அறிந்தேன் உன்னை ;
ஆழ் கடலின் அமைதி
கொண்ட , பெண் மனம்
அன்றோ நீ .....என்றும்
கவிதைகளில்
முற்று பெறாத
புரியாத புதிர்
தானே பெண் மனம் !.....
💐💐🌹💁🌹💐💐