காய்சசி எடுத்து கொண்ட சூரியன்

காய்ச்சி எடுத்து கொண்ட சூரியன்

ஏரியில் நீர் வற்றி
காய்ந்து போன நிலங்கள்
போட்டு வைத்த
சித்திரங்கள்
நீள் வட்ட சதுரங்களாய்
வாய் பிளந்து !

காய்ச்சி எடுத்து
கொண்டவன்
இந்த சூரியனோ ?

கொஞ்சம் மிச்சம்
மீதி வைத்தாலாவது

கோடை முடியும் வரை
இருக்கும் ஜீவன்களுக்கு
உயிர் கொடுக்க
உபயோகமாயிருக்கும்

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (11-Mar-20, 4:54 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 113

மேலே