எது அது
குளிர் தேசம் பனி காடு பாலைவனம் என எங்கும் செல்லலாம்
பேருந்து கட்டணமோ ரயில் விமான கட்டணமோ தேவையில்லை
நினைத்தவரோடு பிடித்தவரோடு கை கோர்க்கலாம் காதல் செய்யலாம் முத்தமிடலாம்
அனுமதி ஒன்றும் தேவையில்லை
சாதியும் மதமும் என்றும் தடையில்லை
எங்கும் செல்லலாம் எதிலும் செல்லலாம் யாருடனும் செல்லலாம்
காட்சிகள் மாறும் ஆகாயம் சுருங்கும்
கேள்விகள் கேட்பாரும் இல்லை பதில் சொல்லவும் தேவையில்லை
இது ஒன்று இல்லையேல் இல்லாதவன் இயல்பில் இனிமை என்றும் இல்லையே
இயற்கை இட்ட வரம் இது
சமத்துவம் ஓங்கி நிற்கும் இடம் அது
எது அது ????