கொரோனாவைரஸை துரத்திட வா சித்திரையே
சித்திரை மாதத் திருமகளே
உன்னிடம் ஒன்று தலைகுனிந்து
கரம் தாழ்த்தி வேண்டிடுவேன்
நான் ஒன்று எனக்காக ஒன்றும் இல்லை
இவ்வுலுகுக்காக ...... எப்போதும்
புன்னகைக்கும் பருவ மங்கையாய்
அவதரிப்பவளே இவ்வருடம் வாராயோ நீ
கொற்றவையாய் மகாமாரியாய் காலியாய்
இந்த வெறிக்கொண்டாடிவரும் கொரோனா
வைரஸாம் அசுரனை ... மாயமாய் வந்து
மக்களை இடியெனத் தாக்குபவனை
அவன் மாய ரூபம் கொண்டு போகும் இடமெல்லாம்
சென்று தாக்கி அவனை அன்று
மகிதனைத் தாக்கி வதைத்ததுபோல் தாக்கி
நிர்மூலமாகிவிடு தாயே ...இந்த
உலகை மாந்தரை அவர் எங்கிருந்தாலும்
நலமுடன் உய்விக்க அம்மா