கிளையை ஒடித்து
உயர்திணை என்று விளித்து வைத்தாயே
உன்னை நீயே மனிதா உண்மையா?
ஒரு துளியைக் கூட உன்னின் செல்லிலிருந்து
இயற்கை முறையில் உருவாக்க முடியுமோ?
நோயுக்கு மருந்தையும் பசிக்கு விருந்தையும்
புசிப்பது செடி கொடி மரத்திலிருந்து என உணர்ந்தாயா
மற்றைய உயிர்களும் மயக்கம் தெளிவிக்கும் நீரும்
உருவாகக் காரணம் மண்டிக் கிடக்கும் மரங்களேயாம்
கிளையை ஒடித்து மண்ணிலே போட்டாலும்
மண்ணோடு புணர்ந்து மாபெரும் வித்தாகும்
மரம் செடி கொடிகளோ இனத்தோடு இணைவதில்லை
மாற்று இனமான மண் மற்றும் கல்லோடும் உறவாடும்
உயர்திணை மரமா? மண்ணா? மனிதமா?
----- நன்னாடன்.