தேடவைத்தவன்

குஞ்சுகளுக்காகக்
கொஞ்சம் இரைதேடியதும்
கூடுதிரும்பிய பறவைக்குக்
கடும் ஏமாற்றம்..
கூடிருந்த
மரத்தையே காணோம்,
காடழிக்கும் மனிதனின்
கைவந்த வேலை-
வெட்டிவிட்டான் மரத்தை..
தேடிச்செல்கிறது குருவி
கடவுளை-
காரணம் கேட்க...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Mar-20, 7:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 87

மேலே