உணர்வினால் உணர்ந்து

உணர்வில்லா உணர்வை உணருகின்ற உணர்வும்
உன்னத உணர்வை உணர வைக்கின்ற உணர்வும்
உள்ள உணர்வாளர்கள் உலகத்தில் உள்ளரென்றால்
உணர்வில்லா ஒவ்வொன்றும் உணர்வில் உயரும் .

கள்ளம் கபடம் கற்றோரில் காணப்படின்
கல்லாதோர் வாழ்வு கபடத்தால் சூழப்பட்டு
கள்ளின் போதைப்போல் கள்ளத்தனம் புகுந்து
கள்ளிச் செடியாய் காணும் வாழ்வு மாறிவிடும்.

அன்பின் பண்பு அனைவரினுள்ளும் பெரிகிடின்
ஆற்றல் பெருகி அன்பு செழித்திடும்
அன்பால் அகமதின் அகங்காரம் குறைந்து
அகமும் புறமுடன்அனைத்து உயிரின்பால் ஈர்ப்பு வரும்.

தெளிதல் தெளிவடைதல் தெளிந்து திறனடைதல்
தெளிந்ததில் திகட்டாமல் திறனோடு செயலாற்றல்
திக்குதோறும் சென்று திறனோடு திரவியமீட்டல்
திறன் மிகுந்த தெளிதல் திறமையை மேம்படுத்தும்.

காணல் கற்றல் கண்டதில் அறிதல்
அறிந்ததில் கேட்டல் கேட்டதால் கற்றல்
கற்றதால் வளர்தல் வளர்ச்சியால் புகழ்ச்சி காணல்
கற்று பெறுவதால் சரித்திரம் படைக்கலாம்.

தேடல் ஒடுதல் தேடியதை அடைதல்
திறம்பட தேடியதை தீர்க்கமுடன் காத்தல்
தேவையானதை மட்டுமின்றி தேடும்போது கண்டதில்
தெளிதல் பகிர்ந்தால் பலங்கூட்டி பக்குவபடலாம்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (17-Mar-20, 9:57 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 71

மேலே