நண்பர்களின் சேர்க்கை

நண்பர்களின் சேர்க்கை

அந்த கடந்தகால நிகழ்வுகளை நினைத்து
ஆசையோடு அசைபோடும் அந்த வேளை
இன்பமான நினைவுகளில் இதயம் துடிக்க
ஈசனின் இந்த சேர்க்கையை கண்டு வியக்கும்வேளை
உயர்ந்த நட்பின் உன்னத தன்மையை உணருகையில்
ஊமையாக்கியது மழலைகளின் வளர்ச்சி
எண்ணங்கள் சிறகடித்து வானில் பறந்திட
ஏகாந்த வேளையை உதறி தள்ளி விட்டு
ஐம்புலனையும் மகிழ வைக்கும் வகையில்
ஒவ்வொரு நாளையும் உல்லாசமாக கழித்து
ஓயாமல் மகிழ்ந்து நிழல் படங்களை கண்டு களித்து
பேசும் படங்களை நினைவுக்கு வைத்து
பிரிய மனமின்றி பிரிந்தோம் வாழ்க்கை சக்கரம்
சுழல வேண்டி ....

எழுதியவர் : கே என் ராம் (12-Mar-20, 11:22 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : nanbarkalin serkkai
பார்வை : 55

மேலே