கீழடி

தோண்ட தோண்ட
தொன்மை குடியாம்!
நாகரீகம் பெற்று
மனிதம் போற்றிய முன்னோர் குடியாம்!
சாதியும் இல்லை சாமியும் இல்லையாம்!
செருகிய கருத்திற்கு
சவுக்கடி கொடுத்து
கல்வி ஏற்றி
கால் சட்டை போட்டு
நீர் தேக்கி
மண் குலைத்து
பானை முனைந்து
தரணியில் முத்தோர் தாம் என்று
பண்பாட்டு ஆதரத்தோடு
பறைசாற்றியுள்ளோம்.

எழுதியவர் : (11-Mar-20, 8:53 am)
சேர்த்தது : Pradeep
பார்வை : 49

மேலே