வணக்கம் சொல்வோம்
ஒருவரை ஒருவர் வாழ்த்துக்கூறி அழைக்கையில்
மறந்தும் கைகுலுக்கிவிடாதே கைகளில் கொரோனா
மறைந்து ஊடுருவி வந்தமர்ந்திருந்தால் துன்பமே
இருவருக்கும் அதனால் 'வணக்கம்' என்று சொல்லி
வரவேற்பதே சாலச் சிறந்த பழக்கம் நம் நாட்டின்
நாகரீகம் நமக்களித்த வரப்பிரசாதம்