தவறிய கலைஞர்

தவறிய கலைஞர்

ஈதலறம் தீவினைவிட் டீட்டபொருள் எஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே இன்பம் பரனைநினைத் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

இப்பாடல்களின் வரிகள் ஒளவையாரால் எழுதப்பட்டவையாகும். தானதர்மம் செய்தல்,
நல்ல அறவழியில் நின்று தீயசெயல் விடுத்து ஈட்டியப் பொருளுடன்கணவன் மனைவி
என்ற இரு காதலர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர்
ஆதரவாய் நின்று குடும்பம் நடத்துவதே இன்பமான இல்வாழ்க்கை.

இதைத்தான் வள்ளுவன் அறம் பொருள் இன்பம் (காமம்) என்றான்.. இது மூன்றும்போதும்
இல்லறத்த்தார்க் கென்றான். பேரின்பவீடு இல்லறம் நடத்துவோன் எஞ்ஞான்றும் அதை
அடையமுடியாதென்று வள்ளுவன் சொல்லாது விடுத்தான்

ஆனால் தமிழ்ப் பெருமூதாட்டி ஒளவையோ இந்த ஈதல் பொருளீட்டல் காதல் மூன்றையும்
துறந்து சதாகாலமும் பரமனை நினைத்து வாழ்ந்து துறவிகள் தங்களின் குறிக்கோளாகிய
பேரின்ப வீட்டை அடைவார்கள் என்று மூதாட்டி ஒளவையார் சொல்லியுள்ளார்.. ஒளவையின்
இந்தப் பாடல் வள்ளுவனின் 1330 குறளையும் விஞ்சிப் பேரின்பவீட்டையும் சேர்த்து இந்த
ஒரேத் தனிவெண்பா பேசுகிறது. இதுதான் ஒளவையின் குணம் சுருங்கக் சொல்லி விளங்க
வைப்பது . பேரின்ப வீட்டை வள்ளுவன் பாடவில்லை அவன் பாடலனைத்தும் இல்லறத்தார்கே

யார் எதைச் சொன்னாலும் அதை தங்கள் தலைவர் சொன்னார் என்று பொதுககூட்டத் தில்
அரசியல் மந்திரிகளும் மற்றவர்களும் பேசுவது வழக்கம். யாதும் ஊரே யாவரும் கேளீர்
என்னும் அமுத வார்த்தையை ஒரு படுபாவி மந்திரி அதை அண்ணா சொன்னார் என்று பொதுக்
கூட்டத்தில் வாய்கிழிய பேசுகிறார். ஏன் கலைஞர் கருணாநிதி கூட தான் திரைக் கதை எழுதிய
ராஜாராணி என்ற தமிழ் படத்தில் கீழ்க் கண்ட ஒளவைப் பாடலை
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் என்பதை T.A. மதுரம் சொல்ல அதற்கு NS கிருஷ்ணன் நான் சொல்ல
நினைத்தேன் அதற்குள் நீ சொல்லிவிட்டாய் சரி வள்ளுவர் எல்லோருக்கும் பொது என்று
அவர் வாயால் சொல்ல வைத்துள்ளார். ஒளவைக்கு கிடைக்க வேண்டிய பாராட்டு இங்கு
வள்ளுவனுக்கு செல்கிறது.இப்படித்தான் பல தமிழ் மூதறிஞர்கள் பல புலவர்களின் பாடல்
வரிகளை பிறர் பாடியதாகவும் சொன்னதாகவும் அவர்களையும் அறியாமல் பிழைபட பிழையாய்
சொல்லியுள்ளார்கள்.
தமிழர்களாகிய நாம் தமிழ் படிக்க வேண்டும். குறளைப் படிக்குமுன் ஒளவையைப் படிக்க வேண்டும்.


ஆத்திசூடி (Atticcuti)
கொன்றை வேந்தன் (Konraiventan
நல்வழி (Nalvazhi)
மூதுரை (Moodurai)
ஞானக்குறள் (Gnanakural)
விநாயகர் அகவல் (Vinayakar Akaval)
நாலு கோடிப் பாடல்கள் (4 Kodi Padalkal)
தனிப்பாடல்கள்

தமிழ் குழந்தைகளுக்கு அக்காலத்தில் நம் முன்னோர் முதலில் சொல்லிக் கொடுப்பது ஒளவையின்
நூல்களைத்தானே. அதைஏன் மறந்தார்கள் மறைக்கிறார்கள்? ஒளவைப் பாடல்கள் அறிவை
வளர்க்கும் நல்லவை தீமையை விளக்கும். ஒற்றுமையை வளர்க்கும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
இனியாவது ஒளவையை மறக்காதீர். வள்ளுவர் குறளுக்கு முன் சிறுவயதில் படிக்க வேண்டியது
ஒளவையின் நூல்களான. படியுங்கள் பயன்பெறுங்கள். வாழ்க தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்,
வளர்க தமிழ் இலக்கியங்கள்.

எழுதியவர் : பழனி ராஜன் (22-Mar-20, 10:42 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 59

மேலே